10ம் வகுப்பு கணித தேர்வு... "கிர்ரென்று" தலை சுற்றிப் போன மாணவர்கள்!

Posted By: Super Admin

நெல்லை: தமிழகத்தில் நடந்த 10ம் வகுப்பு கணித தேர்வில் வினாக்காள் கடினமாக இருந்ததால் மாணவர்கள் திணறி போய் விட்டனராம்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு கடந்த 8ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதலில் மொழி பாட தேர்வுகள் நடந்த நிலையில் அடுத்த கணித தேர்வு நடந்தது.

இதில் பலர் அதிக மார்க் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் சில குறிப்பிட்ட வினாக்கள் கடுமையாக இருந்ததாக ஆசிரியர்கள் தேர்வுக்குப் பின்னர் தெரிவித்தனர்.

கஷ்டமான வினாக்கள்

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது, வரைபடம் மற்றும் 5 மார்க் வினாக்கள், இடைக்கண்டத்தின் கன அளவு, நாற்கரத்தின் பரப்பளவு உள்ளிட்ட சில வினாக்கள் கடினமாக இருந்தது.

உள்வாங்க வேண்டியிருந்தது

இதே நேரத்தில் கட்டாய வினாக்கள் சற்று உள்வாங்கி செய்ய வேண்டி இருந்தது. அதிகம் பயிற்சி எடுத்து கொள்ளாத கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

அவுட் ஆப் சிலபஸ்

பிரிவு 2ல் வினா எண் 18க்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. 24ம் கேள்விக்கும் விடையை நன்றாக யோசித்துதான் எழுத வேண்டும். நெல்லை மாவட்ட கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட பயிற்சி கையெட்டில் இருந்து அதிக வினாக்கள் வந்திருந்தது

சென்டம் குறையும்

இது போன்ற காரணங்களால் இந்தாண்டு கணக்கில் சென்டம் எடுப்பவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களும் பெரும் கவலையில் உள்ளனர்.

English summary
SSLC students and teachers have said that the Maths exam was really a tough one. Centum makers will fall this year, they opine.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia