கும்பலாக உட்கார்ந்து காப்பி அடித்த உ.பி மாணவர்கள்.. அடேங்கப்பா அதிர்ச்சி சம்பவம்!

Posted By:

லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் நேற்று 10ம் வகுப்பு கணிதத் தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவ மாணவியர் கும்பலாக காப்பி அடித்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ மாணவியர்கள் அதிகமாக காப்பியடித்து எழுகிறார்கள். இது தொடர் கதையாக நீடிக்கிறது.

உத்திரப் பிரதேசத்தில் நேற்று 10ம் வகுப்பு கணிதத் தேர்வு நடைபெற்றது. அதில் மாணவ மாணவியர்கள் கூட்டாக காப்பி அடித்து எழுதியுள்ளனர். இந்தப் பிரச்சனையால் அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது. காப்பியடித்து எழுதுவது அதிகரித்து வருகிறது.

கூட்டு காப்பி

10ம் வகுப்பு கணிதத் தேர்வு உத்திரப்பிரதேசத்தில் நேற்று நடந்தது. அதில் மாணவ மாணவியர்கள் கூட்டாகச் சேர்ந்து காப்பியடித்துள்ளனர். மதுரா, பாலியா போன்ற இடங்களில் மாணவிகள் கூட்டாக சேர்ந்து காப்பியடித்தது அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

மதுரா பள்ளியில்

மதுராவில் உள்ள ராதா கோபால் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஒருவருக்கொருவர் விடைத்தாள்களை மாற்றி காப்பிஅடித்துள்ளனர். மேலும் வெளியில் உள்ளவர்கள் வந்து மாணவ, மாணவிகளுக்கு காப்பிஅடிப்பதற்காக துண்டு சீட்டுகளையும் வழங்கியிருக்கின்றனர்.

நோட்டுப் புத்தகங்கள்

காப்பி அடிப்பதற்காக நோட்டு புத்தகங்ளையும் பரிமாறிக் கொண்டுள்ளனர். மாணவிகள் காப்பி அடிப்பதற்கு அங்குள்ளவர்கள் அனைவரும் உடன்பட்டுள்ளனர். இது மேலும் அதிர்ச்சி தரும் தகவலாகும். பாலியா மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு விடைகள் எழுதப்பட்ட கார்பன் நகல்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் மாணவர்கள் புத்தகங்களை திறந்து வைத்து காப்பி அடித்து தேர்வினை எழுதியுள்ளனர்.

ஆசிரியர்களே உடந்தை

நிறைய பள்ளிகளில் அந்தந்த பள்ளிக் கூட ஆசிரியர்களே மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களே மாணவ மாணவியர்கள் பார்த்து எழுதுவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. போதுமான எண்ணிக்கையில் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படாததுதான் இதற்கு முக்கிய காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவாற்றலை சோதிக்கவே தேர்வு

மேலும் பொதுத் தேர்வு என்பது மிகவும் முக்கியமானத் தேர்வாகும். அது மாணவர்களின் திறமை மற்றும் அறிவாற்றலை சோதிப்பதற்காக நடத்தப்படுவதாகும். அதில் உண்மையாக இருந்தால்தான் அவரவர் உண்மை திறமை வெளிப்படும். எனவே கூட்டுக் காப்பி அடித்து மாணவ மாணவியர்கள் எழுதுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது.

English summary
Many more students were caught copying in the 10 examintions in UP. They were caught by the CCTV camera.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia