சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்!

சென்னை: சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளை மாணவ, மாணவிகள் பயில ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தப் படிப்புகளைப் பயில தமிழகத்தில் விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது.

வரும் ஜூலை4-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் இந்த விண்ணப்பங்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படும்.

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்!

இந்திய மருத்துவவமுறைகளில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா-இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகள் உள்ளன. இதற்காகத்தான் இப்போது விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்திய மருத்துவ முறை படிப்புகள், தமிழகத்தில் 6 அரசு கல்லூரிகளிலும், 21 தனியார் கல்லூரிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இளநிலை பட்டப் படிப்புகளான பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎஸ்எம்எஸ், பியூஎம்எஸ் ஆகியவற்றுக்கு அரசு இடங்கள் 336, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 780 என மொத்தம் 1,116 இடங்கள் உள்ளன.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி ஆகிய ஆறு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

விண்ணப்பங்களைப் பெற கட்டணம் ரூ. 500 ஆகும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பதிவு பெற்ற இந்திய முறை பரம்பரை மருத்துவர்களின் குழந்தைகள், பிளஸ் டூ பாடத்திட்டத்தில் சித்த மருத்துவப் பாடத்தை தேர்வு செய்து படித்தவர்கள் ஆகியோர் ரூ. 100 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு கட்டணம் கிடையாது.

ஜூலை 24-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அந்தந்தக் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தைத் தொடர்பு கொண்டு மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Students can get applications for various Indian medicine courses which will be given in 27 colleges including 6 government colleges. For more details student can contact the health department site that is www.tnhealth.org.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X