பி.இ. படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்...!!

Posted By:

சென்னை: நடப்புக் கல்வியாண்டில் (2016-17) அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர ஜூன் 10-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் சோ.மதுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள், நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர ஜூன் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பி.இ. படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்...!!

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் தேவையான சான்றுகளுடன் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்த பிரதியை, உரிய ஆவணங்கள், பதிவுக் கட்டணத்துடன் அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரிகள் பின்வருமாறு:

1. www.accet.co.in

2. www.accet.edu.in

3. www.accetlea.com

கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பதாரர் ரூ.300-க்கான வரைவோலையை, ""The Secretary, Second Year B.E B.Tech. Degree Admissions-2016, ACCET, Karaikudi-'' payable at karaikudi என்ற பெயரில் பெற்று பதிவுக்கட்டணமாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பதிவுக் கட்டணத்துடன், ""செயலர், நேரடி இரண்டாமாண்டு பி.இ, பி.டெக் சேர்க்கை 2016, அழகப்பா செட்டியார் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, காரைக்குடி-630004'' என்ற முகவரிக்கு, ஜூன் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளங்களைப் பார்வையிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu technical education council director announceds that Students can apply for B.E., B.Tech courses 2nd year through online.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia