10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு நாளை 8 முதல் விண்ணப்பிக்கலாம்!

Posted By:

சென்னை: 2016 மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சிக்கு அக்டோபர் 8-ம் தேதி முதல் விண்ணப்பிக்க முடியும்.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு நாளை 8 முதல் விண்ணப்பிக்கலாம்!

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு (இ.எஸ்.எல்.சி.) முடிவு கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்களும், ஏற்கெனவே இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும் அக்டோபர் 8 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது பதிவு எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் வழங்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் 80 சதவீத வருகைப் பதிவு இருக்கும் தனித்தேர்வர்கள் மட்டுமே அறிவியல் பாட செய்முறை, எழுத்துத் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவர் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

English summary
Students can apply for 10th science practical exams which will be held in march 2016. For More details students can logon in to www.tndge.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia