விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை மே 3ல் சேர்க்கை நடக்கிறது

சென்னை: அரசு விளையாட்டு விடுதிகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 விளையாட்டு விடுதிகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மாணவ மாணவியர் தங்கி படித்து விளையாட்டில் சாதனை படைப்பதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை மே 3ல் சேர்க்கை நடக்கிறது

அத்துடன் விளையாட்டில் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் விளையாட்டு விடுதியில் மாணவர்களுக்கு தடகளம், சிறகு பந்து, கூடைப் பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், பளுதூக்கல், கபடி ஆகியவற்றில் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் 7,8,9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியரை சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான சேர்க்கை மே 3ம் தேதி நடக்கிறது. ஈரோடு வ.உ.சி பூங்காவில் நடக்கிறது. ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம், ஆகியவற்றில் விடுதிகள் உள்ளன. மாணவர்களை பொருத்தவரை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி,கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி,நாமக்கல் ஆகிய இடங்களில் விடுதிகள் உள்ளன.

சேர்க்கை விண்ணப்பங்கள் பெற விரும்புவோர் ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் ரூ. 10 செலத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். மாவட்ட, மாநில அளவிலும் தேசிய அளவிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25ம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் 0424 - 2223157 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Sports authority of Tamil Nadu announced the admission in sports hostels located in various cities of the state.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X