எதுக்கு "கொச கொச"ன்னு.. நச்சுனு நாலு கோர்ஸ் வச்சா போதாதா.. ஐஐடிகளுக்கு உத்தரவு!

Posted By:

டெல்லி : அதிக அளவில் மாணவர்கள் சேராத படிப்புகளை நீக்கி விடுமாறு ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

அதேபோல படிப்புகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் வராமல் உள்ள நிறுவனங்களையும் மூடி விடலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் பல படிப்புகள் ரத்தாகும் என்று தெரிகிறது.

இதற்குப் பதில் அதிக மாணவர்கள் வரக் கூடிய வாய்ப்புள்ள, வேலைவாய்ப்புகளை அதிகம் தரக் கூடிய படிப்புகளை அதிக அளவில் அறிமுகப்படுத்துமாறும் மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை கூறியுள்ளது.

இணை அமைச்சர்

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே ராஜ்யசபாவில் இந்தத் தகவலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு நிதி உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இதுதொடர்பாக அறிவுரை கூறியுள்ளோம்.

அறிவுரை

கடந்த 3 ஆண்டுகளில் காலியாக இருந்த சீட்டுகளை அடிப்படையாக வைத்து அதிக மாணவர்கள் சேராத படிப்புகள், மையங்களை மூடி விடுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

டிமாண்ட் கோர்ஸஸ்

வேலைவாய்ப்பு அதிகம் உள்ள, அதிக டிமாண்ட் உள்ள, அடிப்படைக் கட்டமைப்புகள் அதிகம் தேவைப்படாத படிப்புகளை அறிமுகப்படுத்துமாறும் எங்களது துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆய்வு நடத்தப்படும்

இதுதொடர்பாக விரிவாக ஆய்வு நடத்துமாறும், இந்த ஆய்வு முடியம் வரை சில வகுப்புகளை மட்டும் தொடரலாம் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதேபோல உடனடியாக எந்த படிப்பையும் நிறுத்தி விட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
The ministry has asked these institution to close down branches and courses which have seen a decline in applicants in the past three years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia