ஜிஎச்சிஐ மாநாட்டில் பங்கேற்க காத்திருக்கும் உதவித்தொகை...!!

Posted By:

பெங்களூரு: கிரேஸ் ஹோப்பர் செலப்ரேஷன் ஆஃப் உமன் கம்ப்யூட்டிங் இன் இந்தியா (ஜிஎச்சிஐ) கல்வி மாநாட்டில் பங்கேற்க மாணவிகளுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

லாப நோக்க அமைப்பான அனிதா போர்க் இன்ஸ்டிடியூட் (ஏபிஐ) இந்த உத்தவிதொகையை அறிவித்துள்ளது.

ஜிஎச்சிஐ மாநாட்டில் பங்கேற்க காத்திருக்கும் உதவித்தொகை...!!

ஐடி மற்றும் கமப்யூட்டிங்கில் பட்டப்படிப்பு, பட்டமேல்படிப்பு, பிஎச்.டி. படிப்பு பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த மாநாடு பெங்களூரில் டிசம்பர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை அனிதா போர்க் இன்ஸ்டிடியூட், ஏசிஎம் இந்தியா நிறுவனம் இணைந்து நடத்துகின்றன.

தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பெண்களை இந்த மாநாட்டில் மாணவிகள் பார்த்து அவர்களது கருத்துகளைக் கேட்டுக்கொள்ள முடியும்.

இந்த மாநாட்டின்போது 170 உதவித்தொகைகள் வழங்கப்படும்.

மாநாட்டுக்கு வருவதற்காக அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் மாணவிகளுக்கு வழங்கப்படும்.

இந்த உதவித்தொகையைப் பெற ஜூலை 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://anitaborg.org/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
The Anita Borg Institute (ABI), a non-profit organization focused on the advancement of women in computing and technology, today opened the student scholarship applications (for women students) for its flagship conference in India, the Grace Hopper Celebration of Women in Computing India (GHCI) 2016. The scholarships will be awarded to deserving female under-graduate, post-graduate and PhD students in computing and IT, to attend the GHCI 2016 conference from 7-9, December, 2016 in Bangalore.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia