அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தொடக்ககல்வி பட்டயப்படிப்பு சேர்க்கை - விண்ணப்பம் விநியோகம்..!

Posted By:

சென்னை : தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 2017-2018ம் கல்வி ஆண்டிக்கான தொடக்க கல்வி பட்டய படிப்பு (டீச்சர் டிரெய்னிங்) ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-2018ம் கல்வி ஆண்டிக்கான தொடக்க கல்வி பட்டய படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை நேற்று காலை 10 மணி முதல் 21.06.2017 அன்று மாலை 5 மணி வரை www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பொதுபிரிவு பிற்பட்ட வகுப்பு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு ரூ. 500ம் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு ரூ. 250ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தொடக்ககல்வி பட்டயப்படிப்பு சேர்க்கை - விண்ணப்பம் விநியோகம்..!

டெபிட் கிரெடிட் கார்டு, இணையதள வங்கி சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள் பற்றிய விளக்கங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் விளக்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சேர்ந்த விவரங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு, சிறப்பு இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் விவரங்களை www.tnscert.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
Student Admission at the State Council of Educational Research and Training, 2017-2018 student applications are welcome.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia