12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்.

Posted By:

சென்னை : ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு 2017ஐ அறிவித்துள்ளது.

இந்த எழுத்துத் தேர்வின் மூலம் அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பிரிவுகளில் உள்ள கிரேடு-சி மற்றும் கிரேடு-டி ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் வேலை... உடனே விண்ணப்பியுங்கள்.

வயது வரம்பு - 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 01.08.2017ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்புகள் கணக்கிடப்படுகின்றன. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி - அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். கிரேடு-டி பணிகளுக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், கிரேடு-சி பணிகளுக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை - எழுத்து தேர்வுக்கு உட்படுத்தி விண்ணப்பதாரர்கள் சோதிக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள் ஸ்டெனோகிராபர் திறன் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்படும். அனைத்து தேர்வுகளிலும் பெறும் மதிப்பெண்களின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

கட்டணம் - விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ. 100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். கணினி செல்லான் மூலம் ஸ்டேட் வங்கி கிளையில் கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள் - விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.07.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 04.09.2017 முதல் 07.09.2017 வரை

மேலும் விரிவான விபரங்களுக்கு http://ssconline.nic.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

English summary
Above article mentioned about stenographer jobs in central government 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia