ரிசர்வ் போலீஸ் படையில் ஸ்டெனோ வேலை .. 211 காலியிடங்கள்!

Posted By:

சென்னை : சி.ஆர்.பி.எப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 211 காலிப்பணி இடங்கள் ஆயுதப் படை பிரிவில் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆயுதப்படைப் பிரிவில் உதவி சப்இன்ஸ்பெக்டர் தரத்திலான ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 211 காலியிடங்கள் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் போலீஸ் படையில் ஸ்டெனோ வேலை .. 211 காலியிடங்கள்!

இட ஒதுக்கீடு - பொதுப்பிரிவினருக்கு 70 காலியிடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 78 காலியிடங்கள், எஸ்சி பிரிவினருக்கு 41 காலியிடங்கள், எஸ்டி பிரிவினருக்கு 22 காலியிடங்கள் மொத்தம் 211 காலியிடங்கள் அறிவிக்க்ப்பட்டுள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 25 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 25 வயதுதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

கல்வித் தகுதி -

12ம் வகுப்புப் படித்திருக்க வேண்டும். அத்துடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் குறிப்பெடுத்து அதனை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை -

விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்துத் தேர்வு, திறமைத்தேர்வு, மருத்துவத் தேர்வு, ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் -

விண்ணப்பக்கட்டணம் rs. 100/- வசூலிக்கப்படுகிறது. எஸ்சி எஸ்டி பிரிவினர், முன்னாள் படைவீரர், பெண் விண்ணப்பதாரர்கள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை -

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும். 27 மார்ச் 2017ம் தேதியிலிருந்து 25 ஏப்ரல் 2017ம் தேதி வரை விண்ணப்பதாரகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு www.crpf.nic.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
211 stenograph vacancies are available in central reserve police force. eligible applicants can apply.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia