ஐஐடி-யில் கட்டணம் கிடுகிடு உயர்வு....!! ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சம்...!!

Posted By:

டெல்லி: நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி-யில் கட்டணம் கிடுகிடுவென் உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 23 ஐஐடி உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக் கட்டணம் ரூ.90 ஆயிரமாக இருந்தது. ஆனால் இது ரூ.2 லட்சமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐஐடி-யில் கட்டணம் கிடுகிடு உயர்வு....!! ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சம்...!!

இரண்டு மடங்குக்கும் அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் இனி ஐஐடி-களில் உயர்கல்வி பயில்வேது கடினமாகிவிடும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கட்டண உயர்வுக்கு ஐஐடி கவுன்சில் நிலைக்குழு (எஸ்சிஐசி) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில் இந்தக் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் முழுவதையும் ரத்து செய்வதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதியளித்துள்ளார்.

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு 66 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றும் இரானி அறிவித்துள்ளார்.

English summary
All the 23 IITs in the country have announced a steep hike in annual fees from Rs 90,000 to Rs 2 lakh. The fee hike is for all undergraduate courses for the upcoming academic session. Students getting admissions in any of the Centrally Funded Institutions like the IITs will have to shell out double the annual fee of what is being charged at present. The annual fee for UG courses at IITs have been hiked from Rs 90,000 to 2 lakhs per year. Last month, the standing committee of IIT Council (SCIC) approved a proposal for a three-fold hike in annual fee in IITs.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia