சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளைப் போலவே செயல்படுவதற்கு தெலங்கானா மாநில பள்ளிகள் முடிவு செய்துள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்ததும், விடுமுறை விடப்படாமல் அடுத்த ஆண்டுக்கான பாடங்களை தொடங்கப்படும்.
இப்போது இதே முறையை தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து தெலங்கானா மாநில பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஜி. கிஷண் கூறியதாவது: சிபிஎஸ்இ பள்ளிகளைப் போலவே நடப்பாண்டு முதல் தெலங்கானா மாநில பள்ளிகளிலும் பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க முடிவு செய்துள்ளோம்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். நடப்பாண்டு முதல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். பள்ளி நிர்வாகங்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளன. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களும் இதற்கு வரவேற்பை அளித்துள்ளனர் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
