மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே பொதுதேர்வு எழுதலாம் என அறிவிப்பு!!!

Posted By:

பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் அறைகள் அந்தந்ந்த பள்ளிகளிலேயே அமைக்கப்படும் . மாணவகள் கல்வி கற்பது மற்றும் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு வசதியாக இனிமேல் பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என பெரம்பளூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசினார்.

 பொதுதேர்வு  எழுத  மாணவர்கள் பயிலும்  பள்ளிகளிலேயே  எழுதலாம் என அரசு அறிவித்துள்ளது

பள்ளி மாணவர்களுக்காக மாணவர்கள் நலன் கருதி இத்தகைய திட்டங்களை உருவாக்குவதாக கூறினார் கல்வி அமைச்சர் திரு.கே.ஏ .செங்கோட்டையன். முன்னாள் முதலமைச்சர் உருவாக்கிய பல நல்ல கல்வித்திட்டங்களால் தான் பெரம்பளூர் கல்வி வளர்ச்சிவீதம் உயர்வதாக கூறினார் .

இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழக பள்ளிகள் திகழ பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன . அதன் பொருட்டு மாணவர்கள் கல்வித்தரம் உயரும் இது தமிழகத்தை இந்திய பள்ளிகளுக்கு முன்னுதரணமாக காட்டும் என கூறினார் .

பள்ளிகளிலிருந்து வேறு பள்ளிகளுக்கு மாணவர்கள் தேர்வு எழுத செல்லும் போது போக்குவரத்து செலவு மற்றும் காலவிரயம் மற்றும் புதிய இடங்கள் என்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவே மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வுமையத்தை உருவாக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் கல்வி அமைச்சர் .
மாணவர்கள் எத்தகைய தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு உதவ தரமான கேள்விகள் அடங்கிய வினாவிடை புத்தகங்கள் உருவாக்கப்படும் என்றார் .

பள்ளிகளின் கட்டடங்கள்  தரத்தை மேம்படுத்துவது குறித்து ஏற்கனவே கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சி.சம்பத் போன்றோர்கள் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி  வருகின்றனர் . பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்குவது போன்று பல்வேறு பள்ளி வளர்ச்சி திட்டங்களை குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது. இனிவரும் காலங்களில் தமிழக அரசு பள்ளி கட்டிடங்கள் மற்றும் ஆசிரியர்கள் தரம் அத்துடன் பாடத்திட்டங்கள் முன்னேற்றம் , போன்று பல்வேறு மாணவ நலத்திட்டங்கள் மாற்றமடையும் என நம்பலாம் .

சார்ந்த பதிவுகள் :

அடடே!!,, இமேஜ் மேங்கில் பாடங்களை கற்கபோகும் தமிழகப் பள்ளி மாணவர்கள் !!! 

மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் தகவல் 

தமிழ்நாடு அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்காக ஊதியகுழு அமைக்கும் என அமைச்சர் அறிவுப்பு 

English summary
above article tell regarding state board examination center in Tamilnadu schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia