பிளஸ் 2 மட்டும் படித்திருந்தாலும் மத்திய அரசு வேலை உண்டு!

சென்னை: நான் பிளஸ்2 மட்டும் பாஸ் செய்துள்ளேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று கவலை கொண்டுள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக மத்திய அரசு இந்த அரிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 6,578 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு கமிஷன்(ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்) வெளியிட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி அளவில் (10 + 2) தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது தேர்வாணையம். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6,578 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

பிளஸ் 2 மட்டும் படித்திருந்தாலும் மத்திய அரசு வேலை உண்டு!

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. போஸ்டர் அசிஸ்டெண்ட்/ சார்ட்டிங் அசிஸ்டெண்ட்: - 3523

2. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் - 2049

3. லோயர் டிவிஷனல் கிளார்க் - 1006

01.08.2015 தேதியின்படி விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருத்தல் அவசியம்.

எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்தவேண்டும். இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

ssconline.nic.in அல்லது ssconline2.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

பகுதி-I விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2015

பகுதி-II விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2015

ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13-07-2015

ஆஃப்லைன் மூலம் தொலைத்தூர பகுதிகளில் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.07.2015

மேலும் இந்தப் பணியிடம் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய

http://ssc.nic.in/notice/examnotice/CHSLE_2015_Final_Notice_ENG_12_06_15.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு காணலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Staff Selection Commission will hold an examination for Recruitment of Postal Assistants/Sorting Assistants, Data Entry Operators and Lower Divisional Clerks.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X