திருச்சி செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ படிக்கப் போகலாமா....!!

Posted By:

திருச்சி: திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்டில் எம்பிஏ படிப்பதற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2016-18-ம் கல்வியாண்டுக்கான படிப்புகளாகும் இது. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியிலிருந்து பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் 50 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும். கடைசி ஆண்டு தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ படிக்கப் போகலாமா....!!

விண்ணப்பங்களை இன்ஸ்டிடியூட் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். இதற்காக ரூ.750-ஐ கட்டணமாக செலுத்தவேண்டும்.

தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.775-ஐ செலுத்தவேண்டும். இதற்காக டி.டி.யை St. Joseph's Institute of Management என்ற பெயரில் திருச்சியில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும்.

இசட்ஏடி, சிஏடி, சிஎம்ஏடி, டான்செட் தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் இந்தப் படிப்பில் சேர எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெறும். விண்ணப்பங்களை ஜூன் 3-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். நுழைவுத் தேர்வு ஜூன் 5-ல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.jim.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

English summary
St. Joseph's Institute of Management, Tiruchirappalli has invited applications for admission to Master of Business Administration (MBA) programme for the academic session 2016-18. Students seeking admisssion to St. Joseph's Institute of Management, Tiruchirappalli can find further details on eligibility criteria, how to apply and selection procedure. Eligibility Criteria: Candidate should be a graduate in any discipline from a recognised university Applicant must have minimum of 50 per cent marks in aggregate in the major and allied subjects Students who have written final semester results are also eligible to apply

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia