எஸ்.எஸ்.எல்.சி தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்கள்

Posted By:

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்கள்

ஏற்கெனவே எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவ மாணவியர் மார்ச் மாதம் நடக்க உள்ள பொதுத்தேர்வில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதலாம் என்று தேர்வுத் துறை கடந்த மாதம் அறிவித்து இருந்தது. அதன்படி தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், தக்கல் முறையின் கீழ் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு அளித்தது. மேற்கண்ட இரு வழிகளில் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இன்று முதல் தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத் துறை இணைய தளத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மார்ச் 2015 - பிரைவேட் கேன்டிடேட் - ஹால்டிக்கெட் பிரிண்ட் அவுட் - என்று ஆங்கிலத்தில் உள்ளதை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்த விண்ணப்பத்தின் எண், தங்களின் பிறந்ததேதி ஆகியவற்றை இணைய தள பக்கத்தில் பதிவு செய்தால் ஹால் டிக்கெட் திரையில்தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வுத் துறை இணைய தள முகவரி: www.tndge.in

English summary
SSLC private students can get their hall tickets through online, the TN government has announced

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia