பத்தாம் வகுப்பு தனித் தேர்வரா நீங்கள்.. கட்டாயம் இதைப் படிங்க.. உடனே விண்ணப்பியுங்கள்..!

Posted By:

சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வர்கள் மற்றும் முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் எழுத இருப்பவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்களும் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். மேலும 80 சதவீதம் வருகை புரிபவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பெயர் பதிவு

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. (10ம் வகுப்பு) பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வர்கள் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தனித் தேர்வர்கள்

2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு இந்நாள் வரை பெயர் பதிவு செய்திராத தனித் தேர்வர்களும் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுத் தேர்வு அனுமதி


இவர்கள் அனைவரும் (இன்று) ஜூன் 5ந் தி முதல் ஜூன் 30ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்பில் 80 சதவீதம் வருகை புரியும் தனித்தேர்வர்கள் மட்டுமே பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பப் படிவம்

இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விபரங்களை பூர்த்தி செய்து 2 நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் தனித் தேர்வர்கள் 30ந் தேதிக்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

English summary
Director of Government Examinations tan. vasundra devi said that, SSLC Exam Science practical course Call for individual candidates to register.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia