வரும் 10-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்...ஆவலுடன் காத்திருக்கும் மாணவச் செல்வங்கள்...!!

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி எஸ்எஸ்எஸ்சி வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்தத் தேர்வு முடிவுகளைக் காண மாணவச் செல்வங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பள்ளி வகுப்பை முடிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வில் வரும் மதிப்பெண்களை வைத்தே அடுத்து சேர வேண்டிய படிப்பைத் தேர்வு செய்யவுள்ளதால் அவர்கள மிகவும் ஆவலுடன் உள்ளனர். தேர்வு முடிவுகளை மாணவச் செல்வங்கள் http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26-ம் தேதி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது. அதேபோல் மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 25-ல் நிறைவடைந்தது.

இந்த 10-ம் வகுப்பைத் தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்புத் தேர்வுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டன.

வரும் 10-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்...ஆவலுடன் காத்திருக்கும் மாணவச் செல்வங்கள்...!!

மேலும், பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும், நியாயனமான முறையில் தேர்வை நடத்தவும், 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமை

லும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்வுக் கூடங்கள் கண்காணிக்கப்பட்டன.
தேர்வின்போது 304 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் வினாத்தாள் கசிவு என்பது நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

மாணவர்கள் வசதியாகத் தேர்வு எழுத, தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் எந்தவித தொந்தரவும் இல்லாமல் தேர்வை மாணவர்கள் எழுதி முடித்தனர்.

தேர்வுக் கூடத்துக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை செய்யப்பட்டு இருந்தது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் (ஹால் டிக்கெட்) உள்ள விதிகளை மாணவர்கள் முறையாக பின்பற்றுமாறு பள்ளிக்கூட நிர்வாகங்கள் அறிவுறுத்தியிருந்தன.

மேலும் மாணவ,மாணவிகள் விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத அறிவுறுத்தப்பட்டிருந்தது.

விடைத்தாளில் குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது..
மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்பட்டது. அதை சரிபார்த்து, மாணவர்கள் கையொப்பமிட்ட பின்னரே அவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்குமாறும் கூறப்பட்டது.

பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.

மேலும் தேர்வின்போது ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

தேர்வுகள் முடிந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி சிறப்பான முறையில் நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதைத் தொடர்ந்து கம்ப்யூட்டரில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடிந்துவிட்டன.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை தமிழக தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார்.

மே மாதம் 10-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் 10-வது முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிப்பது என்ற கேள்வி அவர்கள் முன்னே எழுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவர்களுக்கான முக்கியமான காலகட்டம் இது. அடுத்து அவர்கள் தேர்வு செய்யப்போகும் பாடத்திட்டம்தான் அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால் மாணவ, மாணவிகள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தேர்வில் வரும் மதிப்பெண்களைப் பொறுத்தே அவர்கள் அடுத்து 11-ம் வகுப்பில் சேரலாமா அல்லது பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து டிப்ளமோ படிக்கலாமா அல்லது ஐடிஐ போன்ற தொழில் படிப்புகளை படிக்கலாமா என்பதை முடிவு செய்வர்.

வழக்கமாக 10-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலேயே சேர்ந்துகொள்வர்.
பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியல், விலங்கியல், தாவரவியல், பயோ டெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி போன்ற இளம் அறிவியல் படிப்புகளையும், எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.இ., பி.டெக் போன்ற படிப்புகளையும் படிக்க விரும்புவோர் 11-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களைக் கொண்ட பிரிவைத் தேர்வு செய்வர். எம்பிபிஎஸ், அறிவியல் படிப்புகளையும், பி.டெக், பி.இ படிப்புகளைப் படிக்க விரும்புபவர்கள் ஃபர்ஸ்ட் குரூப் என்று அழைக்கப்படும் கணிதம், இயற்பியல், வேதியல், பயாலஜி போன்ற பாடங்கள் அடங்கிய பிரிவிலும் மாணவ, மாணவிகள் சேர்கின்றனர்.

எம்பிபிஎஸ், பி.எஸ்சி படிப்பில் மட்டுமே சேர விரும்புபவர்கள் பியூர் சயின்ஸ் குரூப்பை் தேர்வு செய்கின்றனர்.

பி.காம் உள்ளிட்ட படிப்புகளை படிக்க விரும்புவோர் கணக்குப் பதிவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்கின்றனர்.

வணிகவியல், கணக்குப் பதிவியல் படிக்க விரும்புபவர்கள் பொருளாதாரவியல் பிரிவுகளில் சேரலாம். சி.ஏ., பி.காம்., எம்.காம், அரசு வேலை, வங்கிப் பணியில் சேர விரும்புவர்கள் இந்த குரூப்பைத் தேர்வு செய்யலாம். கணக்குப் பதிவியல் பாடங்களைப் பயில விரும்பும் மாணவர்கள் வங்கி வேலை, அரசு வேலைகளுக்கு முயற்சி செய்யலாம்.

வரலாறு, பொருளாதாரவியல் பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்பவர்கள் உயர்கல்வியின்போது இதே பிரிவில் பி.ஏ, எம்.ஏ. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளைப் பயில முடியும். அதுமட்டுமல்லாமல் பட்டமேற்படிப்பு முடிக்கும்போது அவர்கள் அரசு தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ஆசிரியர் பணி உள்ளிட்ட துறைகளில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வொக்கேஷனல் குரூப் பிரிவும் மாணவர்களுக்கு மிக முக்கியமான பிரிவாக உள்ளது. தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவை வொக்கேஷனல் குரூப் என்று அழைக்கிறோம். இந்தப் பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவச் செல்வங்கள் பொறியியல் (B.E., /B.Tech, B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகளைப் படிக்க முடியும். மேலும் தொழில் நுட்ப துறை சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும்.

அதைப் போலவே 11-ம் வகுப்புக்குச் செல்ல விரும்பாதவர்கள் டிப்ளமோ படிப்புகளை பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து படிக்கின்றனர். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிப்ளமோ படிப்புகள் பாலிடெக்னிக்குகளில் கொட்டிக்கிடக்கின்றன. இதைப் படித்து முடித்துவிட்டு வருவோருக்கு ஏராளமான தொழில்வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

மெக்கானிக், சிவில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில் நுட்பத் துறைகள் , மருத்துவத் துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளமோ படிப்புகள் பரவிக் கிடக்கின்றன. தொழில் நுட்ப டிப்ளமோ படிப்புகளில் ஆட்டமொபைல், இஇஇ, இசிஇ, மெக்கானிக்கல், சிவில் ஆகிய டிப்ளமோ படிப்புகள் பிரபலமானவையாக உள்ளன. இவற்றை பெரும்பாலானா மாணவர் தேர்வு செய்து படிக்கின்றனர். மேலும் டிப்ளமோ படித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து பி.இ., பி.டெக் படிக்கும் வாய்ப்பும் மாணவர்களுக்கு இருக்கிறது.

இந்தத் துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால் ஆண்டுதோறும் டிப்ளமோ படிப்புகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஹோட்டல் நிர்வாகப் படிப்பு சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.

மேலும், மரைன் டெக்னாலஜி சார்ந்த டிப்ளமோ படிப்புகளும் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்தப் படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும்போது அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. டிப்ளமோ படிப்புகளை மாணவர்களுக்கான வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

அதேபோல் ஐடிஐ போன்ற இன்ஸ்டிடியூட்களில் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் படிப்பைக் கொண்டு ஏராளமான தொழிற்சாலைகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உடனடியாகக் காத்திருக்கிறது.

எனவே, 10-வகுப்புத் தேர்வு முடிவுகள் என்பது மாணவர்களுக்கு மிக முக்கியமான கட்டமாக உள்ளது. அடுத்த உயர்நிலைப் படிப்பைத் தேர்வு செய்வது இந்த 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் என்பதால் இதன் முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

தேர்வு முடிவுகளை மாணவச் செல்வங்கள் http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே...!!

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN SSLC Results 2024 is scheduled to be released on May 10. Students who appeared for the Tamil Nadu 10th board examination will be able access their results on the official websites of DGE TN at dge1.tn.nic.in and dge2.tn.nic.in. The results will also be available on tnresults.nic.in. Tamil nadu students are eagerly waiting for the results.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+