கான்ஸ்டபிள் பணிக்கான மருத்துவத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

Posted By:

டெல்லி: கான்ஸ்டபிள் பணிக்கான மருத்துவ தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

கான்ஸ்டபிள் பணிக்கான ஆட்களை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தேர்வு மூலம் நியமனம் செய்யவுள்ளது. இதற்காகவே தற்போது மருத்துவ தேர்வுகள் நடத்தவுள்ளது. இந்தத் தேர்வுகள் மே 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

கான்ஸ்டபிள் பணிக்கான மருத்துவத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எஸ்எஸ்சி-யின் இணையதளமான http://ssc.nic.in/ -ல் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்.

இணையதளத்துக்குள் நுழைந்து 'Constable Medical Exam Call Letter 2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விவரங்களை அதில் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொல்ளலாம்.

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையமானது, குரூப்-பி, குரூப்-சி பிரிவுக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது.

English summary
The Staff Selection Commission (SSC) has released the admit cards for the GD constable medical exam. The admit cards for the exam are available on the official website of SSC. Candidates who have qualified the earlier rounds of the exam can download the admit cards/hall tickets for the constable medical exam. The exam is scheduled to be held on May 10, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia