மத்திய அமைச்சகம் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,351 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெற உள்ளது.
இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்தது. இந்தப் பணியிடங்கள் குறித்த விரிவான விளம்பரம், தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் போன்ற தகவல்களை ssc.nic.in அல்லது sscsr.gov.in என்னும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












