1,064 ஸ்டெனோகிராபர் வேலைவாய்ப்பு: எஸ்எஸ்சி அழைக்கிறது!!

Posted By:

சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) 1,064 ஸ்டெனோகிராபர்களைத் தேர்வு செய்யவுள்ளது. ஸ்டெனோகிராபர் கிரேட் சி, கிரேட் டி பிரிவில் இந்த பணியிடங்கள நிரப்பவுள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அகில இந்திய போட்டி தேர்வு மூலம் ஸ்டெனோகிராபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

ஸ்டெனோகிராபர் கிரேட் சி பிரிவில் 50 பணியிடங்களும், ஸ்டெனோகிரபாபர் கிரேட் டி பிரிவில் 1,014 பணியிடங்களும் காலியாகவுள்ளன.

1,064 ஸ்டெனோகிராபர் வேலைவாய்ப்பு: எஸ்எஸ்சி அழைக்கிறது!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்திலிருந்து 12-ம் வகுப்பு படித்து முடித்திருக்கவேணன்டும். 18 முதல் 27 வயதுக்குள்பட்டவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம். தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு வைக்கப்படும்.

அதன் பின்னர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சான்றிதழ்களுடன் ஆன்-லைனில் கிரேட் சி பிரிவுக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்குள்ளாகவும், கிரேட் டி பிரிவுக்கு செப்டம்பர் 9-ம் தேதிக்குள்ளாகவும் விண்ணப்பம் செய்யவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://ssconline.nic.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Staff Selection Commission (SSC) invited applications for the post of Stenographer (Grade ‘C' and ‘D') through All India Open Competitive Examination. The eligible candidates can apply online to the post through the prescribed format.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia