காசு பணம் துட்டு மணி மணி..... நாணய அச்சகத்தில் வேலை வாய்ப்பு.....

நாணய அச்சகத்தில் 201 வேலை வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : நாணய அச்சகத்தில் 201 காலி பணியிடங்கள் உள்ளன. ஐ.டி.ஐ டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் என்ஜினீயர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது.

இந்திய நாணய கழகம் மற்றும் பண அச்சக நிறுவனம் சுருக்கமாக ஸ்பிம்சில் என அழைக்கப்படுகிறது. மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாக இது செயல்படுகிறது.

நான்கு இடங்களில் ரூபாய் நோட்டு அச்சகங்களும், 4 இடங்களில் நாணய அச்சகமும், 3 இடங்களில் பணத்திற்கான காகித தயாரிப்பு தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. தற்போது ஐதராபாத்தில் உள்ள நாணய அச்சகத்தில் ஜீனியர் டெக்னீசியன் பணிக்கு 141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

காசு பணம் துட்டு மணி மணி.....  நாணய அச்சகத்தில் வேலை வாய்ப்பு.....

பிட்டர், மில்ரைட், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர், பிளம்பர், மாசன், டிரைவர், லேப் அசிஸ்டன்ட், பார்ஜர் அண்ட் ஹீட் ட்ரீட்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01/04/2017 தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02/04/1992 மற்றும் 01/04/1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு படிப்புடன் முழு நேரமாக ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்திருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ. 400/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

01/05/2017ந் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும். மேலும் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு

மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் சூப்பிரவைசர், ஜீனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஜீனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 51 இடங்களும் சூப்பிர வைசர் பணிக்கு 9 இடங்களும் உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, சிவில் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.இ. பி.டெக் சிறப்புத் தகுதியாக கொள்ளப்படும். ஜீனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு பட்டப்படிப்புடன் தட்டச்சு-கணிணி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் சிறப்பு தகுதியாக கொள்ளப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ. 400 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 01/05/2017ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேணடும்.

மேலும் விபரங்களுக்கு igmhyderabad.spmcil.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Apply for Latest SPMCIL Recruitment 2017. Please read the provided information such as educational qualification, application fees, selection procedure etc.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+