மும்பை ஜெயின் இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. டிப்ளமோ சேர்க்கை ஆரம்பம்

Posted By:

சென்னை: மும்பையிலுள்ள எஸ்.பி. ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் ரிசர்ச்சில் (SPJIMR) பி.ஜி. டிப்ளமோ படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

நிர்வாகப் பிரிவில் பி.ஜி. டிப்ளமோ படிப்பற்கான வாய்ப்பாகும் இது. இந்தப் படிப்பு 2016-18 கல்வியாண்டுக்குரியதாகும்.

மும்பை ஜெயின் இன்ஸ்டிடியூட்டில் பி.ஜி. டிப்ளமோ சேர்க்கை ஆரம்பம்

இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2 முடித்து அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கவேண்டும்.

பட்டப்படிப்பு இறுதியாண்டு படிப்பவர்களும் இந்த படிப்பில் சேரலாம். மேலும் 5 ஆண்டு பணியில் அனுபவம் பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர முடியும்.

இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைனில் விண்ணப்பிக்க ரூ.1,200 கட்டண் வசூலிக்கப்படும். கிரெட்டிட் கார்ட் அல்லது நெட் பேங்க்கில் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.

படிப்பில் மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள், வேலை பார்த்த அனுபவம் இவற்றை கணக்கில் கொண்டு படிப்புக்கு மாணவர்கள் தேர்வ செய்யப்படுவர். டிசம்பர் 7-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://spjimr-pgdm.formistry.com -ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
S.P. Jain Institute of Management and Research (SPJIMR), Mumbai has invited applications for admission to 2 year full time residential Post Graduate Diploma in Management (PGDM) programme for the academic session 2016-18. Eligibility Criteria: Candidate should have a bachelor's degree or its equivalent (10+2+3) from a recognised university Students in the final year of graduation are also eligible to apply Fresh graduates and those with up to 5 years of work experience can apply

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia