சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் சிறப்பு கற்பிக்கும் திறன்

Posted By:

ஆசிரியர்கள் தினத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகளில் ஒன்று உலக கல்வியும் ஆசிரியர்களும் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும் . உலகின் மிகசிறந்த கல்வி கொண்ட நாடு எது என்றால் அனைவரும் சிங்கப்பூர் என்று கூறுவர் ஆனால் உண்மையில் உலகில் சிறந்த கல்வி முறையை கொண்ட நாடு எனில் அதில் பின்லாந்து நாட்டின் கல்வி முறையாகும் .

ஆசிரியர்தினத்தில் இந்திய மற்றும் உலக சிறப்பு ஆசிரியர்கள் அறிவோம்

பின்லாந்து நாட்டில் வறுமையும் வளமும் குறைந்திருந்த பொழுது அங்கு அந்நாட்டை வளப்படுத்த சிறந்த கல்வி வழங்கவேண்டும் என்று அந்நாட்டு அரசு முடிவெடுத்தது அதன்படி பின்லாந்து நாட்டில் ஆசிரியர்க்கு நல்ல சம்பளமும் மாணவர்களை அனுகும் போது ஆசிரியர்க்கு சிக்கலுமற்ற மனபோக்கை கொடுத்து ஆசிரியர்களுக்கு சிறப்பான மனநிலையை உருவாக்கி கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்துகிறது பின்லாந்து கல்விமுறையில் மாணவர்களுக்கு 7 வயதுமுதல் கற்றல் தொடக்கம் வருடம் முழுவதும் அழுத்தமற்ற அட்டவணையை கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்க உதவுகிறது .

கடின உழைப்பும் மெனகெடலும் கொண்ட இந்திய ஆசிரியர்கள்:

கடின உழைப்பும் மெனகெடலும் கொண்ட இந்திய ஆசிரியர்கள் இந்தியாவில் அதிகம் . இந்திய ஆசிரியர்களை போல் இந்தியாவில் கடின உழைப்பும் , மாணவர்களுக்காக மெனகெடலும் கொண்ட ஆசிரியர்களை காணபது அரிது . இந்தியா போன்ற மிகபெரிய ஜனநாயக நாட்டில் ஆசிரியர்கள் பெரிய சவால்களை சந்திக்கின்றனர். இருப்பினும் மாணவர்கள் மத்தியில் சிரித்த புன்னகையுடன் வல்லமையான கல்வியை கற்றுத் தரும் வாய்ப்பை கொண்டவர்கள் ஆசிரியர்கள் ஆவார்கள் .

இந்தியாவில் கல்வியை கட்டணமின்றி கற்றுத்தர நாட்டிலுள்ள இளைஞர்கள் தயார்நிலையில் உள்ளனர் . கற்றதை கற்றுகொடு என்ற பழமொழியை நன்கு அறிந்தவர்கள் இந்திய இளைஞர்கள் .

மாணவராக இருந்த ஆசிரியர் :

ஆசிரியர்தினத்தில் இந்திய மற்றும் உலக சிறப்பு ஆசிரியர்கள் அறிவோம்

தமிழ்நாட்டில் கோகுல் என்ற மாணவர் தன்னுடைய கல்லுரி வயது முதல் தான் கற்ற தொழில்நுட்ப கணினியை அரசு மாணவர்களுக்கு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமின்றி சேவையுடன் கற்பித்தலை ஒரு வழக்கமாக கொண்டு கற்றுத்தருகிறார் . மாணவர்களை வீட்டிற்கு அழைத்து விடுமுறை நாட்களை கற்றுதரவும் தயாராக இருக்கின்றார் . தற்பொழுது தனியார் நிறுவனத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கோகுலன் தான் கற்றதை பிறருக்கு கற்றுதரும் கொள்கையை கொண்டுள்ளார் . இச்சிறப்புமிகு கற்பித்தலை கேரியர் இந்தியா அறிமுகப் படுத்துவதில் பெருமையடைகிறது .

ஆசிரியர்தினத்தில் இந்திய மற்றும் உலக சிறப்பு ஆசிரியர்கள் அறிவோம்

பல்வேறு இயக்கங்களாக இன்றைய இளைஞர்கள் அறிவு பகிர்தலை நடத்தி மாணவர்களே இன்று ஆசானாக மாறும் அளவிற்கு இந்திய தேசத்தின் கற்றலும் கற்பித்தலின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது .

சார்ந்த பதிவுகள்:

ஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள் 

அறிவை புகட்டி அன்பில் கலந்து பண்பாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்!! 

English summary
here article tell about teachers day special

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia