பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு.. டைம் டேபிள் வெளியீடு..!

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவு மே 12ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்புத் தேர்வு எழுத ஆன்லைனில் மே 29ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்புத்துணைத் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 23ந் தேதி நடைபெற உள்ளது. சிறப்புத்தேர்வுக்கு மே 29ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு.. டைம் டேபிள் வெளியீடு..!

மார்ச் மாதம் 2ந் தேதி முதல் 31ந் தேதி வரை பிளஸ்2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வுக்கு வராதவர்களுக்காக அடுத்த மாதம் 23ந் தேதி முதல் ஜூலை 6ந் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் வருகிற 29ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் அறிந்து கொள்ளலாம்.

சிறப்பு துணைத் தேர்வுக்கால அட்டவணை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜூன் 23ந் தேதி - தமிழ் முதல் தாள்

ஜூன் 24ந் தேதி - தமிழ் 2வது நாள்

ஜூன் 27ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

ஜூன் 28ந் தேதி - ஆங்கிலம் 2வது தாள்

ஜூன் 29ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி

ஜூன் 30ந் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

ஜூலை 1ந் தேதி - கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட் டிக்ஸ்

ஜூலை 3ந் தேதி - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்

ஜூலை 4ந் தேதி - தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்

ஜூலை 5ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்

ஜூலை 6ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Plus 2 examination results were released on May 12th. Those who have not passed the exam can apply for a special test online from May 29.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+