விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் விண்ணப்பிப்பவரா நீங்கள்? இதைப் படியுங்கள்

Posted By:

சென்னை : விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் (எம்பிபிஎஸ் மட்டும்) விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் (பொது மற்றும் சிறப்பு) தேவையான சான்றிதழ்களையும் (இரு நகல்கள்) சென்னை கீழ்ப்பாக்கம், தேர்வுக்குழு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

உரிய சான்றிதழ் நகல்களை நேரில் சென்று மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தபால் மூலம் பெறப்படும் விளையாட்டு சான்றிதழ் நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அனைத்து விபரங்களும் தகவல் தொகுப்பேட்டில் அளிக்கப்பட்டுள்ளது.

முதல் பட்டதாரி

அரசு ஒதுக்கீட்டில் உள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருந்தால் அவர்கள் தகவல் தொகுப்பேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதற்குரிய சான்றிதழ்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். (Annexure XIV(a) and XIV(b)) மேலும் விண்ணப்பதாரரின் குடும்பத்தில் அவரது உடன் பிறந்தோர் இந்த சலுகையை பயன்படுத்தியிருக்ககூடாது.

மாற்றுத் திறனாளிகள்

முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர்) ஆகியோர் அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவம் பல் மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் தகவல் தொகுப்பேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதற்குரிய சான்றிதழ் படிவங்கள் (Annexure IV(a) & IV (b)) மாவட்ட மருத்துவ குழுவால் வழங்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட படிவம் தவிர மற்ற சான்றிதழ்கள்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பம் நேரில் பெறுபவர்கள் கவனத்திற்கு

மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பப்படிவத்தை இணையதளம் மூலமும், நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். நேரில் பெற விரும்புவோர் அதற்கான கேட்பு வரைவோலையை இணைத்து அந்தந்த மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி சென்னை முதல்வர்களுக்கு மனு கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். கேட்பு வரைவோலை 23.06.2017க்கு முன் தேதியிட்டதாக இருக்கக் கூடாது. வரைவோலை தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் "The secretary, selection committee, kilpauk, chennai - 10" என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும். இந்த வரைவோலை சென்னையில் பணமாக மாற்ற தக்கதாக இருத்தல் வேண்டும்.

சிறப்புப் பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

அரசு கல்லூரிகளில் உள்ள சிறப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் பொது விண்ணப்பத்துடன் சேர்த்து சிறப்பு ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து ஒரே உறையில் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டிற்கும் ரூ. 100/- வீதம் வரைவுக் காசோலையை இணைத்து அனுப்ப வேண்டும். பொது விண்ணப்பத்திற்கு ரூ. 500/- செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் கேட்பு வரைவோலை இணைக்கத் தேவையில்லை. தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு விண்ணப்பப் படிவக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் சாதிச் சான்றிதழ் நகல் ஒன்றினை சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

English summary
Above article mentiond about Special quota for athletes in MBBS Applications

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia