'ஹிப் ஹாப்' இசையில் நடனத்தோடு கணக்குப் பாடம்!

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள இபன் டாங்கஸ் மேல்நிலைப்பள்ளியில் கணித வகுப்புகளை குர்த் மின்னார் என்ற 33 வயது ஆசிரியர், ஹிப் ஹாப் இசையில் நடனத்தோடு கற்றுக்கொடுத்து வருகிறார்.

By Kani

பெரும்பாலான பள்ளிகளில் 'கிளாஸ் கட் அடிக்க ஒரு ரீஸன் கிடைக்குமா' என்ற மனநிலையில் இருக்கும் மாணவர்களே அதிகம். ஆனால் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள இபன் டாங்கஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கணித வகுப்புகளை மட்டும் மாணவர்கள் தவற விடுவதே இல்லையாம்.

அப்படி என்னதான் அங்கு விஷேஷம் என கேட்டுகிறீர்களா இருக்கே. குர்த் மின்னார் (33) என்ற கணக்கு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு ஹிப் ஹாப் இசையில் நடனத்தோடு கூடிய கணக்கு பாடத்தை பயிற்றுவித்து வருகிறார்.

'ஹிப் ஹாப்' இசையில் நடனத்தோடு கணக்குப் பாடம்!

இதனால் கணிதம் என்றாலே கசக்கும் என்று ஒரு நேரத்தில் பள்ளியை விட்டு ஓடிய மாணவர்கள் இன்று கணித வகுப்புகளுக்காகவே காத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து குர்த் மின்னார் கூறுகையில்,

நான் ஆரம்பத்தில் ஹிப் ஹாப் டான்ஸராக இருந்தவன். பின்புதான் ஆசிரியர் பணிக்கு வந்தேன்.

எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி கற்கும் திறன் இருக்காது. ஆனால் நடனத்தையும் இசையையும் விரும்பாத மக்களே, மாணவர்கள் இருக்க முடியாது.

எனவே, மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்தும் விதமாக 60 நிமிடங்களை கொண்ட பல்வேறு வகையான இசை, நடனத்துடன் கூடிய பாடங்களை தயார் செய்து பயிற்றுவித்து வருகிறேன்.

இதன் மூலம் தற்போது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்ததோடு, நான் நினைத்ததை விட மிக அதிகமாகவே மாணவர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் பல புதிய முயற்சிகளை பாடத்திட்டத்தில் புகுத்தி மாணவர்களுக்கு எளிதில் புரியும் படி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக குர்த் மின்னார் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
South-African Teacher Uses Hip-Hop to Make Math Fun for Students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X