கல்வித்துறை அதிகாரிகளுக்கு "செக்" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..!

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்வித்துறை அலுவலகங்களுக்கும் 'பயோமெட்ரிக்' கருவி விநியோகிக்கப்பட்டு வருவதால் வரும் 12ம் தேதிக்குள் அவற்றைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்வித்துறை அலுவலகங்களுக்கும் 'பயோமெட்ரிக்' கருவி விநியோகிக்கப்பட்டு வருவதால் வரும் 12ம் தேதிக்குள் அவற்றைப் பொருத்தி, இதுகுறித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகளுக்கு

தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவு முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் கருவி பொருத்த கடந்த 2018 அக்டோபர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள, 7,726 அரசு, அரசு உதவிபெறும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் கருவிகள் விநியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குநர் ராமேஸ்வர முருகன் இது தொடர்பாக சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார். அதில் பயோமெட்ரிக் கருவி, 'கூரியர்' மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, வரும் 11ம் தேதிக்குள், வட்டார வாரியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பொருத்தி, இதுகுறித்த அறிக்கையை வரும் 12ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Soon..! Biometric Attendance System For Govt And Aided School Teachers..!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+