எந்த படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்? - சரியான பாடப்பிரிவை தேர்வு செய்ய சில டிப்ஸ்..!

Posted By:

சென்னை : வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சிறந்த படிப்பு அல்லது சிறந்த கல்லூரி மட்டும போதாது, மாணவர்களின் ஆர்வத்திற்கும், திறமைக்கும் ஏற்ப சிறந்த துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு படிப்புகளை தேர்ந்தெடுக்காமல் மாணவர்களின் ஆர்வத்தை அடிப்படையாக் கொண்டு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது நன்று.

ஏனெனில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் வேலை வாய்ப்புகள் உண்டு. நீங்கள் உங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை எடுத்து படிக்கும் போது மட்டுமே அதில் சாதிக்க முடியும்.

நீங்களே தேர்ந்தெடுங்கள்

பெற்றோர்களின் வற்புறுத்தல் மற்றும் நண்பர்களின் மேல் இருகும் நாட்டம் ஆகியவற்றை அடிப்படையாக வைக்காமல் உங்களுக்கு எதில் ஆர்வமும் திறமையும் அதிகம் உள்ளதோ அந்தப் படிப்பை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தப் பின் சரியான மற்றும் தரம் மிக்க கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் சேர விரும்பும் கல்லூரியைப் பற்றி நன்கு விசாரிப்பது நல்லது.

எதிர்காலத்தை கருத்தில் கொள்ளுங்கள்

நீங்கள் எதிர்காலத்தில் எந்த துறையில் சாதிக்க விருப்பம் உள்ளதோ, அதற்கேற்றவாறு துறையை தேர்வு செய்தல் மிக்க நன்று. உதாரணமாக வெல்டிங் துறையில் பணிப்புரிய ஆர்வம் இருந்தால் மெக்கானிக்கல் என்ஜீனியரிங்கிற்குப் பதில் மெட்டலார்ஜிக்கல் என்ஜீனியரிங் துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

வேலை சூழல்

படித்து முடித்த பிறகு எந்த மாதிரியான சூழ்நிலைகளில் வேலை செய்யப் போகிறோம் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு துறையை தேர்வு செய்தலும் மிக்க நன்று. உதராணமாக மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தால் அதிக வெப்பநிலையில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்ய நேரிடலாம். எனவே இம்மாதிரியான சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுவும்.

உயர்க்கல்வி வாய்ப்புகள்

தேர்ந்தெடுக்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு உள்ள உயர்க்கல்வி வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்வது மிக்க நன்று. அதற்கான வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்வதும் நல்லதுதான். நிறைய சம்பாதிக்கலாம் என்பதற்காக உங்களுக்கு விருப்பம் இல்லாத படிப்பில் சேர்ந்து தோற்றுபோவதைக் காட்டிலும் உங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுத்துப் படித்து வெற்றி பெறுவது நல்லது.

English summary
It is inconceivable to choose the best disciplines in the pursuit of the curiosity and skills of the students, not just the best college to advance in life

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia