கல்வி மாநாடு: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடக்கிவைத்தார்!!

Posted By:

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்தும் திங்க்எஜு கல்வி மாநாட்டை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தொடங்கிவைத்தார்.

சென்னை கிண்டியிலுள்ள தி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இந்த மாநாட்டை இன்று காலை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கிவைத்தார். ஆண்டுதோறும் இந்த மாநாட்டை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்தி வருகிறது.

கல்வி மாநாடு: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடக்கிவைத்தார்!!

இதில் மத்திய அமைச்சர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், கல்வி நிபுணர்கள் கலந்துகொண்டு விவாதங்களை நடத்துவர்.

இந்த ஆண்டில் மத்திய முன்னாள் அமைச்சர்கள் ஃபாருக் அப்துல்லா, பல்லம் ராஜு, எம்.பி.க்கள் ராம் மாதவ், பூனம் மகாஜன், திரைப்பட இயக்குநர் சந்தோஷ் சிவன், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கல்துகொண்டு பேசவுள்ளனர்.

மொத்தம் 2 நாள் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஜிந்தால் ஸ்கூல் ஆஃப் கவர்ன்மெண்ட் அண்ட் பப்ளிக் பாலிசியின் ஷிவ் விஸ்வநாதன், டெல்லி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தினேஷ் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்,

English summary
It’s back! The New Indian Express’ ThinkEdu Conclave returns this year, with a line up of leaders and speakers of every stripe — from those who make policy to those who debate it, holding the floor right from the get go. The conclave this year will have its who’s who list of speakers debating it out in a series of riveting conversations, debates and a few stand-alone lectures.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia