சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி

Posted By:

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ பள்ளிகள் மற்றும் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் கட்டாயம் திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படும் என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மற்றும் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி

சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மற்றும் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்திம் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாடத்திட்டம் ஆகும். இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் அனைத்து தேசிய நுழைவுத் தேர்களையும் எளிதில் எதிர்கொள்கின்றனர்.

சி.பி.எஸ்.இ மற்றும் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு திறன்பட பணியாற்ற வேண்டும் என்பதற்காக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் கட்டாயம் ஆசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

ஆசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும்க கட்டாயம் பங்கு பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் பங்கு பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி முடிவில் தேர்வுகள் நடத்தப்படும் அதற்கான மதிப்பெண்களும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் திறமையை வளர்க்கும் விதத்திலேயே இந்த திறன் வளர்ச்சி பயிற்சி வகுப்புகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஆசிரியர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் இருப்பதற்காகவே அனைத்து ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

English summary
Ministry of Human Resource Development (government of india) has Announced Must Given Annually Skill Development Training For CBSE Teachers.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia