நீட் தேர்வுக்கு எதிராக தொடரும் ஆறாவது நாள் போராட்டம் !!

நீட் தேர்வு எதிர்த்தை ஆறாவது நாளாக தொடரும் போராட்டம் பள்ளி கல்லுரி மாணவர்கள் பங்கேற்பு அதிகரித்து வருகிறது

By Sobana

விபரிதமாகும் நீட் தேர்வு விவகாரம் ஆறாவது நாளாக அனல் பறக்கும் ஆர்ப்பாட்டம் போராட்டம் , விண்ணை பிளக்கும் கோசங்கள் என மாணவ எழுச்சி எங்கு பார்த்தாலும் மாணவ தலைகள் இனி என்ன செய்ய போகும் அரசு என்று அரசே பதிலளிக்க வேண்டும் .

ஆறாவது நாள் போராட்டம் :

தமிழகம் முழுவதும் ஆறாவது நாள் போராட்டம் மெய்சிலிர்க்கும் கோசம் மருத்துவ மாணவர்களுக்காக அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் ஒன்று சேர்ந்திருப்பது தமிழக மாணவர்களின் ஒற்றுமையை ஒன்று சேர்த்துள்ளது .

மாணவர்களின் நீட் தேர்வுக்கெதிரான ஆறாவது நாளாக மாணவ போராட்டம் தொடர்கிறது

அச்சமில்லை அச்சமில்லை:

திருச்சியில் தூக்குகயிற்றில் இருந்தபடியே பேராட்டத்தை தொடரும் மாணவர்கள் . மதுரை தமுக்கம் மைதானத்தில் கூடிய மாணவர்கள் எந்த தடியடிக்கும் அஞ்சாமல் நின்று கோசங்கள் எழுப்பிய வண்ணம் சிலை போன்று நின்றனர். காவல்துறை அதிகாரிகள் குண்டுக்கட்டாக மாணவர்களை அள்ளி வீசிய போதும் நீட்டை எதிர்த்து குரல்கொடுத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

உள்ளிருப்பு போராட்டம் :

சென்னையில் ராயப்பேட்டை கல்லுரி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பழநியிலும் பழநியாண்டவர் கல்லுரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் .

வாயில் போராட்டம்:

திருப்பூர் எல்.ஆர்.ஜி கல்லுரி மாணவிகள் கல்லுரி நுழைவாயிலில் இருந்து தொடர்ந்து கோசங்கள் எழுப்பி வருகின்றனர். கோவை அரசு கல்லுரி மாணவர்கள் பாரதியின் பாதகம் செய்வோரை கண்டால் பயந்து ஒடாதே பாப்பா என்ற வரிகளை நினைவு படுத்தும்விதமாக தொடர்ந்து போராடி வருகின்றனர் . அரியலுரில் மாணவர்கள் கடும் போராட்டத்தில் நிற்கின்றனர்.

பள்ளிகளில் மாணவப்படை போராட்டம் :

நீட் தேர்வினை எதிர்த்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாடங்களை நிறுத்திவிட்டு வீதியில் நின்று போராடுவதை காணும்போது மீண்டும் ஒரு புது இரத்தம் பாய்ச்சப்படுவது போன்ற உத்வேகம் தென்படுகிறது . சாதிகட்சிகள் , அரசியல் தலைவர்கள் சினிமா நடிகர்களைவிட சக்திவாய்ந்தவர்கள் மாணவர்கள் .

"ஒரு மாணவனின் சக்தி ஆயிரம் மடங்கு அணுசகிதிகளை விட பலமானது
ஒரு மாணவனின் புக்தி ஆயிரம் கத்திகளைவிட கூர்மையானது"

என்பதனை அரசு உணர வேண்டிய நேரமிது என்பது மாணவப் படைகளை கானும்போது தெரிகின்றது .

நெல்லை சங்கரன் கோவில் , திருவாரூர், அரியலுர் போன்ற பகுதிகளில் அரசு பள்ளி மாணவர்களின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. விண்ணை முட்டும் கோசங்கள் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களை எழுச்சியடைய வைக்கின்றது .

சிம்சி கல்லுரி நீட்தேர்வால் சேர்க்கையை நிறுத்து அறிவிப்பு :

நீட்தேர்வால் சிஎம்சி வேலூர் கல்லுரி தனது நிர்வாக காரணத்தைக்காட்டி நீட்தேர்வினால் மாணவ சேர்க்கையை நிறுத்தி பகிரங்க எதிர்ப்பை தெரிவித்துள்ளது என்பதை மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்கள் . 1943 அம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி சுதந்திர காலமுதல் செயல்ப்பட்டு வருகின்றது .

என்ன செய்யும் அரசு :

தமிழக மாணவர்களின் போராட்டத்தையடுத்து அரசு என்ன செய்யும் என்பதை அறிவிக்க வேண்டிய பொருப்பில் உள்ளது அரசு அமைதிகாத்து வருகின்றது . காவல்த்துறையை வைத்து கபட நாடகம் ஆடுமா அல்லது மாணவர்களுக்காக என்ன நடவடிக்கை எடுக்கும் அரசு என்பதை அறிவிக்க வேண்டும் அரசு . அரசு வாய்மூடி கைக்கட்டி நின்று வேடிக்கைப்பார்ப்பதை பொதுமக்கள் பார்த்துகொண்டுதான இருக்கின்றனர் என்பதை அரசு விரைந்து செயல்பட வேண்டும் அல்லது ஆட்டிக்கட்டிலிருந்து பொதுமக்களால் தூக்கியெரியப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை ! வலுக்கும் போராட்டம்!!,,நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை ! வலுக்கும் போராட்டம்!!,,

நீட் தேர்வு எதிர்த்து அதிகரித்து வரும் போராட்டங்கள் ,,!நீட் தேர்வு எதிர்த்து அதிகரித்து வரும் போராட்டங்கள் ,,!

நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் மாணவி தற்கொலைநீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் மாணவி தற்கொலை

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about students protest against neet exams
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X