பிரபல எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ சேர்க்கை அறிவிப்பு!

Posted By:

சென்னை: புகழ்பெற்ற சிம்பியாஸிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் பிஸினஸ்(எஸ்ஐஐபி) பள்ளியில் எம்பிஏ படிப்பதற்கான சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் அமைந்துள்ள சிம்பியாஸிஸ் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட். இந்த இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டு எம்பிஏ படிப்புக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் பிஸினஸ், அக்ரி பிஸினஸ், எனர்ஜி அண்ட் என்விரான்மெண்ட் ஆகிய பிரிவுகளில் எம்பிஏ படிப்பில் இங்கு சேரலாம்.

பிரபல எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ சேர்க்கை அறிவிப்பு!

இந்த படிப்பில் சேர விரும்புவோர் பட்டப்படிப்பில் 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மதிப்பெண் சலுகைகள் உண்டு.

இந்த படிப்பில் சேர விரும்புவோர் இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.symbiosissummerschool.in -ல் சென்று ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும்.

அவருக்கு இன்ஸ்டிடியூட் சார்பில் தேர்வு வைக்கப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எம்பிஏ படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு http://www.symbiosissummerschool.in -ல் என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Pune has invited applications for admission to 2 years full time residential Master of Business Administration (MBA) in International Business, Agri-Business and Energy & Environment. Admissions are offered for the academic year 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia