சித்தா ஓமியோபதி படிக்க விருப்பமுள்ள மாணவர்களே உங்களுக்கான சேர்க்கை விவரம் அடுத்த வாரம்

Posted By:

சித்த மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பான விவரங்கள் அடுத்த வாரம் தொடங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளது . இந்தாண்டு நீட் தேர்வு தொடர்பான மருத்துவ கலந்தாய்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . தமிழக அரசின் 85% வீகிதம் ஓதுக்கீடு காரணமாக எழுந்த வழக்குகள் நீதிமன்றத்தின் ஒதுக்கீடு இரத்து தீர்ப்பு அதனை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு நடவடிக்கையால் மருத்துவ கவுன்சிலிங் தாமாதமாகின்றது .

சித்தாமற்றும் ஓமியோபதி போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் தொடங்கும் .

இந்நிலையில் அடுத்தவாரம் சித்தா, ஓமியோபதி, நேச்சுரோபதி , யுனானி,ஆயுர் வேதா, யோகா போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. மேலும் மாணவர் சேர்க்கை ஒரு மாதம் நடைபெறும் என தகவல்கள் கிடைத்துள்ளது . சித்தா, ஓமியோபதி போன்ற சேர்க்கை இடங்கள் அரசு மற்றும் தனியார் கல்லுரிகளில் அரசு இடங்கள் மொத்தம் 1500 இடங்கள் இருக்கும் . மேலும் மாணவர் சேர்க்கையின் போதுதான் எத்தனை இடங்கள் கிடைக்கும் என தெரியும் . இந்தாண்டு மருத்துவ கவுன்சிலிங் தாமாதமாவதால் இத்தகைய படிப்புகளுக்கான போட்டி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது . சித்தா , ஓமியோபதி குறித்த படிப்புகளுக்கான வரவேற்பும் அதிகரித்து காணப்படுகிறது.இந்தாண்டு எத்தனை கல்லுரிகளுக்கு அனுமதி கிடைக்கும் என்பது பொருத்து மாணவர் சேர்க்கை மாறுபடும் .  ஆதலால் இதுகுறித்து மாணவர்கள் தயாராக இருத்தல் நலமாகும்.

சித்தா, ஓமியோபதி போன்ற படிப்புகளில் பிளஸ் 2 கட் ஆஃப் மதிபெண்கள் வைத்து சேர்க்கை நடைபெறுவதால் அதிக போட்டி இந்தாண்டு இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது .

சார்ந்த தகவல்கள் : 

உயர்கல்வி மருத்துவபடிப்புகளுக்கான கவுன்சிலிங் மத்திய அரசு நடத்துகிறது

 தமிழக அரசின் மருத்துவ படிப்புகளுக்கான 85% சதவிகித இடஒதுக்கீடு இரத்து

English summary
here article tell about siddha and aayurveda studies admission

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia