பெங்களூரு எஸ்ஐபிஎம் இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ படிக்க ஆசையா...?

Posted By:

சென்னை: பெங்களூரு சிம்பியாஸிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் (எஸ்ஐபிஎம்) 2 ஆண்டு எம்பிஏ படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2016-ல் இந்த படிப்புகள் தொடங்கப்படுகின்றன. ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், ஆப்பரேஷன்ஸ், ஹியூமன் ரிசோர்ஸஸ் மேனேஜ்மெண்ட் ஆகிய பிரிவுகளில் எம்பிஏ பயிலலாம்.

ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை 50 சதவீத தேர்ச்சியுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 45 சதவீத தேர்ச்சி பெற்றாலே போதுமானது.

பெங்களூரு எஸ்ஐபிஎம் இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ படிக்க ஆசையா...?

இளநிலை பட்டப்படிப்பு கடைசி ஆண்டு படிப்பவர்களும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த படிப்பு பயில விரும்புபவர்கள் எஸ்ஐபிஎம் கல்வி நிறுவன இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பதிவுக் கட்டணமாக ரூ.1,000 செலுத்தவேண்டும்.

மாணவர்களுக்கு வைக்கப்படும் தேர்வின் அடிப்படையில் எம்பிஏ படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெயரைப் பதிவு செய்ய நவம்பர் 24 கடைசி தேதியாகும். ஆன்-லைனில் விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் டிசம்பர் 16 ஆகும்.
பணம் செலுத்த டிசம்பர் 18 கடைசி நாளாகும். தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்படும்.

தேர்வு முடிவுகள் ஜனவரி 21-ம் தேதி வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு எஸ்ஐபிஎம் இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sibmbengaluru.edu.in/-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Symbiosis Institute of Business Management (SIBM), Bangalore has invited applications for admission to 2 years full time Master of Business Administration (MBA) programme in Finance, Marketing, Operations and Human Resources Management. Admissions are offered for the session 2016. Eligibility Criteria: Graduate from any recognised university with a minimum of 50% marks (45% for SC/ST) at graduation level can apply Students appearing for final year exam can apply but their admission will be subject to obtaining a minimum of 50% marks (45% for SC/ST) at qualifying examination.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia