மாற்றுத்திறனாளிகளுக்கு... தேசிய வேலை வாய்ப்பு சேவை மையத்தின் குறுகியகால பயிற்சி முகாம்....!

Posted By:

சென்னை : மத்திய தொழிலாளர் நலத்துறையின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வேலை வாய்ப்பு சேவை மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறுகில கால பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த மாதம் 22ந் தேதி முதல் பயிற்சி முகாம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி தகுதி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

 மாற்றுத்திறனாளிகளுக்கு... தேசிய வேலை வாய்ப்பு சேவை மையத்தின் குறுகியகால பயிற்சி முகாம்....!

இந்த பயிற்சி முகாமில் பார்வை திறன், செவி திறன் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.

கைபேசி பழுது நீக்குதல், தையல் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், ஸ்கீரின் பிரிண்டிங் மற்றும் புத்தகக் கட்டமைப்பு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் தேசிய வேலை வாய்ப்பு சேவை மையத்தை இன்று (திங்கட்கிழமை) தொடர்பு கொள்ளவும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

வருகின்ற 22ந் தேதி முதல் பயிற்சி தொடங்கும். மேலும் விபரங்களுக்கு கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வேலை வாய்ப்பு சேவை மையத்தை 044-22501534 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

English summary
The National Job Service Center for Displacement of Central Workers Welfare Department will be held on the basis of a short term training camp.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia