மரைன் என்ஜினீயர்களுக்கு கப்பல் கழகத்தில் வேலையிருக்கு!

Posted By:

சென்னை: மரைன் என்ஜினீயர்களுக்காக பல்வேறு பணியிடங்கள் இந்திய கப்பல் கழகத்தில்(ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா) காத்திருக்கின்றன.

இந்திய கப்பல் கழகத்தில் கிராஜுவேட் மரைன் என்ஜினீயர் பணிக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது இந்திய கப்பல் கழகம். மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் நிறுவனம் ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

மரைன் என்ஜினீயர்களுக்கு கப்பல் கழகத்தில் வேலையிருக்கு!

கிராஜுவேட் மரைன் என்ஜினீயர் பணிக்காக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

மேலும் அவர்களுக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதி நிலவரப்படி வயது 24-க்குள் மட்டுமே இருக்கவேண்டும்.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தப் பணியில் அமர்த்தப்படுவர்.

மும்பை, புதுடெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் ஆன்லைன் எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 பெறப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 மட்டும் வசூலிக்கப்படும்.

இந்த விண்ணப்பக் கட்டணத்தை எஸ்பிஐ வங்கியில் நெஃப்ட் முறையின் கீழ் பணமாக செலுத்தி அதற்குரிய யுடிஆர் எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பின்னர் www.shipindia.com/career/fleet personnel என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவேண்டும். ஜூலை 20-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாகும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு விண்ணப்ப நகலை Senior Vice President, Fleet Personnel Department, Third Floor, The Shipping Corporation of India Limited, Shipping House, 245 Madame Cama Road, Nariman Point, Mumbai - 400021, Maharashtra. என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

இந்த ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் 27.07.2015-ம் தேதிக்குள் சென்று சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய www.shipindia.com/career/fleet personnel என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு காணலாம்.

English summary
The Shipping Corporation of India has invites applications from marine engineers for the job of Graduate Marine Engineer. For more details logon to www.shipindia.com/career/fleet personnel.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia