ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சிக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு விண்ணப்பிங்க!

Posted By:

சென்னை : சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் அரசுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புக்களில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மற்றும் மத்திய சமூக நீதி அமைச்சகம் ஆகியவை இணைந்து எஸ்சி மற்றும் ஓபிசி மாணவ மாணவியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புக்களை நடத்துகிறது.

ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சிக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு விண்ணப்பிங்க!

இலவச பயிற்சி வகுப்புக்கள் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்காக நடத்தப்படுகிறது.

இலவச பயிற்சி வகுப்புக்களில் ஆங்கிலம் மூலம் பயிற்சியளிப்பதுடன், கிராமப்புற மாணவர்களுக்கு எளிதில் புரிவதற்கு உதவும் வகையில் அனைத்துப் பாடப்பகுதிகளும், வினாக்களும் தரப்படுகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் சோதனைத் தேர்வுகள், விரிவுரை வகுப்புகள் என பல்வேறு முறைகளில் மாணவர்களின் திறன்கள் கூர்மைப்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியை மத்திய சமூக நீதி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்காக செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 50 மாணவ மாணவியர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மாத உதவித் தொகையும் கொடுக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கும் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறும். பின்னர் சான்றிதழ் சரிபார்த்து தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு ஏப்ரல் 12ம் தேதி வழங்கப்படும். நுழைவுத் தேர்வு ஏப்ரல் 20ம் தேதி காலை 11 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும்.

மேலும் தகவல்களுக்கு 044 43533445, 64597222, 45522227 மற்றும் 9444166435 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்வு கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு www.shankariasacademy.com என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Shankar IAS Academy Free Coaching Centre has announced Entrance Exam. the best coaching centre for Civil Services Exams in South India.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia