விரிவுரையாளர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்புகிறது

Posted By:

சென்னை: விரிவுரையாளர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) விரைவில் நிரப்பவுள்ளது. மொத்தம் 222 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன.

இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது. 222 சீனியர் விரிவுரையாளர், விரிவுரையாளர், ஜூனியர் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விரிவுரையாளர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்புகிறது

மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மாஸ்டர் டிகிரி, எம்.எட் பட்டத்தை பெற்றிருக்கவேண்டும். மேலும் 5 ஆண்டு ஆசிரியர் அனுபவமும் இருக்கவேண்டும். விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மாஸ்டர் டிகிரி, எம்.எட் பட்டம் பெற்றிருத்தல் அவசியம், ஜூனியர் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மாஸ்டர் டிகிரி, எம்.டெக் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு (31.07.2016-ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்): 57 வயதுக்கும் மேல் இருக்க கூடாது

ஊதிய அளவு: Senior Lecturer - Rs.15600 - 39100 + GP Rs. 5700/-
Lecturer - Rs.9300 - 34800 + GP Rs. 4800/-
Junior Lecturer - Rs.9300 - 34800 + GP Rs. 4800/-

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: https://www.dropbox.com/s/ylj3npauqmyibm8/trb.jpg?dl=0&raw=1 என்ற லிங்க்கைக் கிளிக் செய்யலாம்.

அதேபோல பாடத் திட்டங்களை பதிவிறக்கம் செய்ய: http://trb.tn.nic.in/DTERT2016/26022016/SCERTSYL.pdf என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.

English summary
Teacher Recruitment Board will recruit Lecturers in Tamilandu College soon. Senior Lecturer - Master Degree with not less than 50% marks and M.Ed Degree with not less than 55% marks and Teaching Experience for a period of not less than 5 years.Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed., for Lecturers in Languages or Subjects and M.P.Ed., degree for Lectures in Physical Education with not less than 55% marks.Junior Lecturer - Master Degree with not less than 50% marks in Tamil, Telugu, English, Mathematics, Physics, Chemistry, botany, Zoology, History and Geography and M.Ed Degree with not less than 55% marks.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia