பாதுகாப்பு மேம்பாட்டில் போலீஸாருக்கு உதவும் ஐஐடி மாணவர்கள்!!

Posted By:

டெல்லி: பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஹைதராபாத் நகர போலீஸாருக்கு ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் உதவியுள்ளனர்.

இதற்காக ஹைதராபாத் ஐஐடி, ஹைதராபாத் நகர போலீஸாருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பாதுகாப்பு மேம்பாட்டில் போலீஸாருக்கு உதவும் ஐஐடி மாணவர்கள்!!

நகரின் பாதுகாப்பு, நகர மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேடக் மாவட்டம் கண்டி பகுதியிலுள்ள ஐஐடி வளாகத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி டநைபெற்றது. ஐஐடி இயக்குநர் யு.பி. தேசாய், ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

போலீஸாருக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு மேம்பாட்டு உதவிகள், தொழில்நுட்ப உதவிகளை நீண்ட காலத்துக்கு ஐஐடி வழஹ்கும். பாதுகாப்பு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகளை மேம்பட்ட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று கமிஷனர் மகேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

English summary
IN A first-of-its-kind agreement, between police and IIT, the Hyderabad City Police and IIT-Hyderabad on Tuesday entered into an agreement for collaboration in areas of advanced technology for enhancing safety and security of the city’s residents.The MoU was signed on the IIT’s campus in Kandi, Medak district, by institute director U B Desai and Hyderabad Police Commissioner M Mahendar Reddy. The MoU is initially meant for three years and extendable later — on mutually agreed terms.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia