ஆதிதிராவிடர் நலப் பள்ளி இடைநிலை: ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

Posted By:

சென்னை: ஆதிதிராவிடர், கள்ளர் நலப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.

trb.tn.nic.in என்ற இணையதளத்தில் 454 பேர் கொண்ட முதல்நிலைத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி:

ஆதிதிராவிடர், கள்ளர் சீர்திருத்தப் பள்ளிகளில் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நேரடி தேர்வு முறையில் பணியில் அமர்த்துவதற்காக 2014 ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் குறித்து அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடத் தயார் நிலையில் இருந்தது.

இப்போது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால உத்தரவு, தமிழக அரசின் அனுமதியின் அடிப்படையில் இந்த முதல்நிலை தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் தகுதி, உண்மை சான்றிதழ்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பணி நியமன உத்தரவு வழங்கப்படும். மேற்கண்ட இணையதளத்தைத் தொடர்பு கொண்டு பட்டியலில் பெயர் உள்ளவ்கள் இதற்காகத் தயாராக வரவேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

English summary
Secondary grade Taechers list has been released by Teachers Recrutiment Board(TRB) yesterday. 454 teachers has been selected for the post.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia