2-ம் கட்ட பி.எட். அட்மிஷன்: 2 ஆயிரம் பேர் கவுன்சிலிங்குக்கு அழைப்பு

Posted By:

சென்னை: ஆசிரியர் வேலையில் சேர உதரவும் பி.எட். சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கவுன்சிலிங்குக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் சுமார் 2 ஆயிரம் பேர் அழைக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, மானியம் பெறும் பி.எட். கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவனம் நடத்தி வருகிறது.

அதன்படி பி.எட். முதல் கட்டக் கவுன்சிலிங் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,000 இடங்கள் நிரம்பின.

மீதமுள்ள 777 இடங்களுக்கு அக்டோபர் 14, 15, 16-ஆம் தேதிகளில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு, குறைந்தபட்ச கட்-ஆஃப் உள்ளிட்ட விவரங்களை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தக் கவுன்சிலிங்குக்கு 2 ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட உள்ளனர் என பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறினார்.

English summary
Second phase Counselling for the B.ed course will be held in october. More than 2 thousand has been called for the counselling process by selection committee.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia