மக்கள் குடியரசு தலைவரின் இரண்டாமாண்டு வானுலக பிறந்ததினம் நினைவு கூறுவோம்

அப்துல்கலாமின் இரண்டாம் ஆண்டு வானுலக வாழ்க்கை வணக்கங்களுடன் நினைவுகூறும் ஒன் இந்தியா

By Sobana

ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் அவர்களின் இரண்டாமாண்டு பிறந்த தினத்தை இன்று நாடுமுழுவதும் கொண்டாடுகிறோம் . என்ன இது என்று யோசிக்கிறீர்களா,, அதுதான் அவருடைய பெருமை, அவரை அறியாத வயதினர் இல்லை அவர் பூமியில் வாழ்ந்த காலம் கழிந்து தாய்மண்ணோடு இராண்டு உடலை கொடுத்து ,வானுலகில் வாழும் ஆத்மாவுக்கு அன்பு மிகு அற்புத விஞ்ஞானியின் இரண்டாவது பிறந்ததினம் இன்று கொண்டாடுவோம் . தேசத்திற்கும் தேச மக்களுக்காக வாழ்ந்தோர்க்கும் என்றும் மரணமில்லை.

மாணவர்களின் மதிப்பிற்குரியவர் இந்தியாவின் வழிக்காட்டிக்கு வணக்கங்கள்

தேசத்தின் மீது இருந்த பொருப்புணர்வும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தன்னிகரற்ற விஞ்ஞானி டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு வானுகலக பிறந்த தினத்தை இந்திய மாணவர்கள் அனைவரும் கொண்டாடுவோம் . தேசத்தை தலைநிமிரச் செய்து தன் வாழ்நாளை டிஆர்டிஓவிலும் , இஸ்ரோவிலும் ஏவுகனை தளத்திலே கழித்த பெரும் விஞ்ஞானியாவார் .

ஏவுணை தந்தை என அழைக்கப்படும் அப்துல்கலாம் மாணவர்களின் மதிப்பிற்குரியவர் ஆவார். 1998 இல் பொக்ரான் சோதனை நடத்தி வல்லரசு நாடுகளை எல்லாம் விழிப்பிதுங்க வைத்தவர். வல்லரசு நாடுகள் கொடுத்த வாய்ப்பை வழியனுப்பி தன்தேசத்திற்க்காக வாழ்ந்தவர், இன்னும் இந்த தேசத்து இளைஞர்களின் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் .

1974 முதல் இந்தியாவின் அனுஆயுத தயாரிப்புக்கு தன்னை அர்ப்பணித்தவர்.
" உலக நாடுகளின் வரலாற்றை புரட்டிப்பாருங்கள் இந்திய வரலாற்றையும் உற்று நோக்குங்கள் இதுவரை இந்திய நாடு எந்த ஒரு அயல் நாட்டையும் நோக்கி படையெடுத்ததில்லை ஆனால் பலபடையெடுப்புகளை சந்தித்த நாடு, புத்தன் , காந்தி பிறந்த அகிம்சை நாடு இது நம் பாரத நாடு "என்று பெருமிதக்க வைத்தவர் அப்துல் கலாம் .

நாட்டின் 11ஆம் குடியரசு தலைவராக பதவியேற்று மக்கள் குடியரசு தலைவராய் இன்று வரை வாழ்ந்துவருகிறார். வகுப்புறையில்தான வருங்கால பாரதம் வாழ்கின்றது என்று மாணவர்களை பெருமிதக்க வைப்பார் .

இஸ்லாம் மதத்தின் பிறந்து இந்தியாவின் இறையாண்மைக்கு உருத்துணையாக இருந்தவர் . அனைத்து மதங்களையும் வழிமொழிந்த உன்னத மனிதராவார் . நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருதினை 1997இல் பெற்றவர் . தனக்கு வழிகாட்டிய ஆசிரியர்களை வாழ்நாள் என்றும் நினைவு கூர்ந்தவர் . சிறந்த ஆசிரியராக நாட்டை வழிநடத்தி சென்றவர் 10லட்சத்துக்கு மேல் மாணவர்களை நேரில் கண்டவர் கோடிக்கணக்கான கனவுகளை விதைத்தவர் .

அக்னி சிறகுகளை தந்து அன்னை தேசத்தை பெருமைபடுத்தியவர் . பல்கலை கழக பட்டங்களுகெல்லாம் சொந்தக்காரர் ஆவர் . இந்தியா 2020, இக்னைட்டடு மைண்ட்ஸ், டார்கெட் 3 மில்லியன் போன்ற புத்தகங்களை படைத்து மாணவர்களுடன் உரையாடியவர் . இளைஞர்களை பெருமிதப் படுத்தியவர், அனைத்து மாணவர்களுக்கும் சொந்தக்காரர்.

மாணவர்களின் மதிப்பிற்குரியவர் இந்தியாவின் வழிக்காட்டிக்கு வணக்கங்கள்

இறுதியாக இந்திய வல்லரசு என்ற நல்லரசு கனவைகொடுத்து பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த என்ன வழி என்று தன் இறுதி நேரத்திற்க்கு முன் ஒரு பொறுப்பை கொடுத்து சென்றுள்ளார் . மாணவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தர் 2008 வரை அனைத்து மாணவர்களுக்கும் அஞ்சல்வழியாக அனுப்பிய கடிதங்களுக்கு பதில் அனுப்பியவர் . நமது கேரியர் இந்தியா சப் எடிட்டர் சோபனாவுக்கு மாணவியாக இருக்கும் போது பதில் கடிதம் கிடைத்துள்ளது . அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் வெற்றியின் வளர்ச்சியில் நிறைந்திருப்பவர் . விண்ணுலகில் இராண்டாம் ஆண்டு வாழும் அப்துல்கலாம்க்கு வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article tell about former president abdulkalam contribution towards India
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+