விளையாட்டு விடுதியில் சேர புதுக்கோட்டையில் ஜூலை 30-ல் தேர்வு!!

Posted By:

சென்னை: விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்காக தேர்வுப் போட்டிகளை மாணவிகளுக்காக நடத்தவுள்ளது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்டிஏடி)

தமிழகம் முழுவதும் விளையாட்டு விடுதிகளை நடத்தி வருகிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.

விளையாட்டு விடுதியில் சேர புதுக்கோட்டையில் ஜூலை 30-ல் தேர்வு!!

இந்த நிலையில் ஹாக்கி, பளுதூக்குதல் போட்டிகளில் ஆர்வமுள்ள மாணவிகளுக்காக தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது எஸ்டிஏடி. இதற்கான தேர்வுப் போட்டிகள் புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் ஜூலை 30-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது. 7, 8, 9, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவிகள் எஸ்டிஏடி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in-ஐத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்னர் இந்த விண்ணப்பங்களை புதுக்கோட்டை மைதானத்தில் தேர்வு அதிகாரியிடம் தரவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும்.

விளையாட்டு விடுதி சேர்க்கை தொடர்பான விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

வேலூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி ஏ. நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Sports Development Authority of Tamil Nadu will be conducting selection trials for schoolgirls who excel in sports on July 30, for the government run sports hostels spread across the State. According to district sports officer A Nagarajan, girl students of 7th,8th,9th and 11th standards who excel in hockey and weightlifting can participate in the selection trials at Pudukottai sports stadium at 8 am on July 30.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia