சித்திரைத் திருநாள் இன்ஸ்டிடியூட்டில் அப்ரண்டீஸ் பயிற்சி

Posted By:

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள சித்திரைத் திருநாள் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) இன்ஸ்டிடியூட்டில் பொது அப்ரண்டீஸ் பயிற்சி இடங்கள் காலியாகவுள்ளன.

மொத்தம் 20 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நவம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். தகுதியானவர்கள் நேரடியாக நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கும் செல்லலாம்.

சித்திரைத் திருநாள் இன்ஸ்டிடியூட்டில் அப்ரண்டீஸ் பயிற்சி

நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படுவோர் பின்னர் அறிவிக்கப்படுவர். தேவைப்பட்டால் எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். 5-ம் தேதி வரும்போது அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சித்திரைத் திருநாள் இன்ஸ்டிடியூட், கேரள மாநிலத்தின் பெருமைமிகு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1973-ல் நிறுவப்பட்டது. இதை திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சித்திரைத் திருநாள் பலராம வர்மர் நிறுவினார். கேரள மக்களின் நலனுக்காக இது அமைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு http://www.sctimst.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Sree Chitra Tirunal Institute for Medical Sciences & Technology (SCTIMST), Thiruvananthapuram invited applications for the posts of General Apprentice. The eligible candidates can appear for the walk -in- Interview along with other necessary documents on 05 November 2015. SCTIMST Vacancy Details Name of the Post: General Apprentice: 20 Posts.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia