10- வகுப்பு தனித் தேர்வு: செப்டம்பர் 21 அறிவியல் செய்முறைத் தேர்வு

Posted By:

சென்னை: பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு( பிராக்டிக்கல் எக்ஸாம்) நடைபெறவுள்ளது.

இந்த செய்முறைத் தேர்வு செப்டம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10- வகுப்பு தனித் தேர்வு: செப்டம்பர் 21 அறிவியல் செய்முறைத் தேர்வு

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும்.

அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்றவர்களும், ஏற்கெனவே இந்தப் பயிற்சியைப் பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.

வரும் மார்ச் 2016-இல் அறிவியல் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் ஜூன் மாதம் நடைபெற்ற செய்முறை பயிற்சிக்கு பெயர்களை பதிவு செய்திருப்பர். அந்தத் தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

English summary
Science Practical exams will be started from Sep 21 for the students who have applied for 10th Private exams, Government exams Directorate has announced in a press release.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia