கோடை விடுமுறைக்குப் பின் நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு..!

Posted By:

சென்னை : கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியை தமிழக அரசு தள்ளிப்போட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஜூன் 7ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் வெயில் தாக்கத்தினால் பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாகும் என பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்ப்பார்த்தப்படி பள்ளிகள் 7ந் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன் படி அனைத்து பள்ளிகளும் நாளை கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்படுகிறது. சென்னை பள்ளிகள் நாளை திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் நாளை திறப்பு

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் ஜூன் 7ந் தேதி நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பள்ளிகள் ஜூன் 7ந் தேதி திறக்கும் என அறிவித்த அறிவிப்பு அனைத்து பள்ளிகளுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.

திருவண்ணாமலையில் ஜூன் 15 பள்ளி திறப்பு

ஆனாலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளித் திறப்பை முடிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் படி திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் மாவட்ட ஆட்சியர் ஜூன் 15ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஜூன் 12 பள்ளி திறப்பு

அதே போல் புதுச்சேரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால் அங்குள்ள பள்ளிகளும் ஜூன் 12ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கல் குறையாமல் காணப்படுவதால் மேலும் பள்ளித்திறப்பு புதுச்சேரி மாவட்டத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 8 பள்ளி திறப்பு

கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கோடை திருவிழா நாளை நடைபெறுவதால் அதன் காரணமாக நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவிதுள்ளார்.

English summary
Schools will be opened tomorrow as the school education minister K.A. sengottaiyan has already announced.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia