பள்ளிகள் இனறு முதல் திறப்பு மழைகாரணமாக கொடுக்கப்பட்ட விடுமுறை முடிவு!

Posted By:

கனமழை காரணமாக 7நாட்கள் விடுமுறைக்குப்பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் கொடுக்கப்பட்ட விடுமுறை இன்றுடன் முடிகிறது

இன்றும் சென்னையில் புரசைவாக்கம் அத்துடன் திநகர், இராயபுரம், வேப்பேரி, திருவெல்லிகேணி உள்ளிட்ட ஒன்பது பள்ளிகளுக்கு விடுமுறை காஞ்சிபுரத்தில் 10 பள்ளிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்து குரோம்பேட்டையில் விட்டு விட்டு மழை பெய்த வந்த்பொழுதும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை

இரவில் பொழியும் மழைகளின் அளவை வைத்து பள்ளி விடுமுறை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என தெரிவித்தனர். படிப்படிப்பாயாக மழையின் அளவு குறையும் என்று வானிலைமையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோரத்தில் பெய்யும் மழையால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குவதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேக்கமில்லாமல் பள்ளிகளில் தூய்மையான சூழல் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளிலன் சுற்றுசூரப்புறச்சூழல் நீர்தேக்கம் தூய்மையாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின் கசிவு எதுவும் ஏற்படாதவாறு பரிசோதனை செய்பப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீரில் கழிவு நீர் கலக்காதவாறு அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரி இதுகுறித்து பள்ளிகளில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது .

பள்ளிமாணவர்களுக்கு மழைநீரில் கவனமாக கடந்து  செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீரில் விளையாட்டுத்தனங்களை குறைத்துகொண்டு பள்ளிகளுக்கு கவனமுடன் சென்றுவர அறிவுருத்தல்,   பள்ளிகள் இன்றுமுதல் திறக்கப்படுவதால் இதுகுறித்து அறிவிப்பினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புகளை வெளியிட்டனர். கடந்த 8 நாட்களாக கடலோர மாவட்டங்களில் பெய்துவரும் மழையின் அளவு அதிகரித்திருந்தநிலை சற்று குறைந்து வருகின்றது.  

சார்ந்த பதிவுகள்:

பத்து கடலோர மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !! 

English summary
here article tell about schools reopen for tamilnadu students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia