ஜூன் 1-ம் தேதி பள்ளி திறப்பு... 10, +2 மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடப் புத்தகங்கள்!

Posted By:

சென்னை: மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்திலிருந்து பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "2015-2015ம் கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே அவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

ஜூன் 1-ம் தேதி பள்ளி திறப்பு... 10, +2 மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடப் புத்தகங்கள்!

ஏற்கனவே பள்ளிக்கூடம் திறந்த அன்றுதான் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தன. வருகிற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு வழங்கும் விலை இல்லாத 14 வித பொருட்களும் மாணவர்களுக்கு தேவைப்படும்போது உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல வருகிற கல்வி ஆண்டிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்," என்றார்.

English summary
The school education department of Tamil Nadu announced that all schools would reopen on June 1st.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia